நல்லூரில் திட்டமிட்டு நடக்கும் சதி..! அசைவ உணவகத்தின் பின்னணி
நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக அசைவ உணவகம் திறக்கப்பட்டிருப்பது ஒரு சதித்திட்டமாக இருக்கலாம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் ஒரு பல்தேசிய கம்பனியின் அசைவ உணவகம் எந்தவித அனுமதியும் இன்றி திறக்கப்பட்டிருந்தது. குறித்த உணவகத்தில் மாட்டிறைச்சியும் விற்கப்படுகின்றது.
ஒரு ஆலய சூழலுக்குள் அசைவ உணவகம் இருக்க கூடாது என்பது எமது அடிப்படை பண்பாக பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்துக்களினதும் தமிழர்களினதும் ஒரு தேசிய அடையாளமாக நல்லூர் ஆலயம் உள்ள நிலையில், அதற்கு முன்னால் இவ்வாறு அசைவ உணவகம் திறக்கப்பட்டிருப்பது இனவாதத்தை தூண்டும் ஒரு சதித்திட்டமாகவே புலப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |