கடலில் நீராடச் சென்ற சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி பலி

Sri Lanka Police Trincomalee Death
By Kiyas Shafe Jul 27, 2026 07:23 AM GMT
Report

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(26.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும், குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் விமான பணிப்பெண்ணாக முயற்சித்த பெண் திடீர் மரணம்

தென்னிலங்கையில் விமான பணிப்பெண்ணாக முயற்சித்த பெண் திடீர் மரணம்

முதற்கட்ட விசாரணை

முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த நபர் நிலாவெளி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடலில் நீராடச் சென்ற சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி பலி | Foreign Tourist Dies At Nilaveli Beach

உயிரிழந்தவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் (TDHA) தலைவர் குமார் ஜெயக்குமாரன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது, கிடைத்துள்ள தகவலின்படி, குறித்த சுற்றுலாப் பயணி நிலாவெளி பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நிலையில் கடலில் நீராடச் சென்றபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

உயிரிழப்புகள் ஏற்படாத வகையில்

உயிர்காக்கும் (Lifeguard) சேவைகள், எச்சரிக்கை கொடிகள், பல்மொழி பாதுகாப்பு அறிவிப்புப் பலகைகள், அவசர மீட்பு உபகரணங்கள், அபாயப் பகுதிகளைத் தெளிவாகக் குறியிடுதல் மற்றும் ஒருங்கிணைந்த கடற்கரை பாதுகாப்பு முகாமைத்துவம் போன்ற பல்வேறு பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலவச ஆலோசனையாக வழங்கியுள்ளோம்.

கடலில் நீராடச் சென்ற சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி பலி | Foreign Tourist Dies At Nilaveli Beach

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையின் பிரதான பங்குதாரர்களில் ஒருவராக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், உலகத் தரத்திலான சுற்றுலா இலக்காக திருகோணமலையை உருவாக்கவும், அரச நிறுவனங்கள், பாதுகாப்பு தரப்புகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு எமது சங்கம் என்றும் தயாராக உள்ளது.

இந்த துயரமான சம்பவம், கடற்கரை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.

இனி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் உடனடி மற்றும் நடைமுறைசார் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து தண்டவாளத்தில் உறங்கிய முதியவர் : திருமலையில் அதிர்ச்சி சம்பவம்

தொடருந்து தண்டவாளத்தில் உறங்கிய முதியவர் : திருமலையில் அதிர்ச்சி சம்பவம்

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் - சகோதரன் பலி

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் - சகோதரன் பலி

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US