அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதி மௌனம்: வெளிவிவகார அமைச்சரை எப்படி நம்புவது! சுரேஷ் கேள்வி

Anura Kumara Dissanayaka Suresh Premachandran Sri Lanka Government
By Rakesh Jan 09, 2026 03:52 AM GMT
Report

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பது பற்றி இதுவரை வாய் திறந்து பேசவில்லை. இந்நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் இப்போது கூறுவதை எப்படி நம்புவது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், அந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களை இந்த அரசு ஒருபோதும் ஏமாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்! அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்! அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு எச்சரிக்கை

 

அரசு தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதி

 "இந்த அரசு இன்று வரை தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. முக்கியமான சில உறுதிமொழிகளாகக் கருதப்படும் காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கம், தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு ஆகிய உறுதிமொழிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

ஜனாதிபதி என்பவர் முப்படைகளின் தளபதி. அவரால் மிக விரைவாகக் காணிகளை விடுவிக்க முடியும். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் எவ்வளவு காணிகளை விடுவித்துள்ளார்? யாழ்ப்பாணத்தில் விரல் விட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா? இல்லை. ஆகவே, அவர்கள் செய்யக்கூடிய விடயங்கள் என்று சொல்லப்படுபவை கூட இன்னும் செய்யப்படவில்லை.

இவ்வாறான நிலையில், தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் இப்போது கூறுவதை எப்படி நம்புவது? தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த ஒரு வருட காலத்தில் அவர்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

13 ஆவது திருத்த சட்டம் 

13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாமல் செய்யப்படும் என்று அவர்கள் கூறினார்கள். அப்படியாயின் அந்த இடத்துக்கு என்ன வரப்போகின்றது? என்னத்தைக் கொண்டு அதை மாற்றீடு செய்யப் போகின்றார்கள்? அந்த இடத்தில் வரப்போவது சமஷ்டியா? அல்லது வேறுவிதமான அதிகாரப் பகிர்வா? அதை எவ்வாறு செய்யப்போகின்றார்கள்? அவர்களது கட்சியில் இருக்கக்கூடிய செயலாளர் ரில்வின் சில்வாவோ அல்லது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ கூட தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பது பற்றி இதுவரை வாய் திறந்து பேசவில்லை.

இவர்களும் ஏனைய அரசுகளைப் போல் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. ஆகவே, அவற்றை அவர்கள் மாற்ற வேண்டுமெனில் பல விடயங்களை அவர்கள் செய்ய வேண்டும் என்றார்.

கொழும்பில் அதிகாலையில் இடம்பெற்ற அனர்த்தம் : கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதம்

கொழும்பில் அதிகாலையில் இடம்பெற்ற அனர்த்தம் : கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதம்

பொலிஸ் அதிகாரிகளாக இரகசிய அழைப்பில் பணம் கொள்ளை! பொது மக்களுக்கு எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகளாக இரகசிய அழைப்பில் பணம் கொள்ளை! பொது மக்களுக்கு எச்சரிக்கை

5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US