சம்பளம் வழங்க டொலர் இல்லாத காரணத்தினால் வெளிநாடுகள் தூதரகங்கள் மூடப்படுகின்றன
வெளிநாடுகளில் இருக்கும் பல இலங்கை தூதரங்களை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டொலர் நெருக்கடி காரணமாக அரசாங்கம் இதனை செய்து வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வியை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தூதரகங்களில் பணிப்புரிவோருக்கு சம்பளம் வழங்க டொலர் இல்லாத காரணத்தினலேயே வெளிநாடுகளில் உள்ள தூதரங்களை அரசாங்கம் மூடி வருகிறது.
ஈராக், நோர்வே நாடுகளில் இலங்கை தூதரங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்நாடுகளில் இருக்கின்றனர் என கிரியெல்ல கூறியுள்ளார்
இதற்கு பதிலளித்துள்ள பிராந்திய ஒத்துழைப்புகள் தொடர்பான ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிநாடுகளில் உள்ள 65 இலங்கை தூதரகங்கள் ஊடாக நாட்டு பிரயோசனம் இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து வருகின்றோம். இதனடிப்படையில், சில தூதரகங்களை மூடி விட்டு, அவற்றின் பணிகளை வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக மேற்கொண்டு பணத்தை மீதப்படுத்தி வருகின்றோம்.
கடந்த காலத்தில் ஆபிரிக்க நாடுகளில் தூதரகங்களை ஏற்படுத்தும் போது ஏன் அந்நாடுகளில் தூதரகங்களை ஏற்படுத்துகிறீர்கள் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். தற்போது தூதரகங்களை மூடும் போது ஏன் மூடுகிறீர்கள் என கேட்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
இதனிடையே தற்போதைய அரசாங்கம் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள தூதரங்களை தவிர ஏனைய நாடுகளில் உள்ள தூதரகங்களை மூடி வருகிறது எனவும் இலங்கையின் தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இருக்கும் தூதரகங்கள் மூடப்படுவதாகவும் கூறும் அமைச்சர்களை மக்கள் கண்டிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam