புலமைப்பரிசில் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் ரதவிரு சிறுவர் புலமைப்பரிசில் பெறுவதற்கான விண்ணப்பங்களுக்கான விண்ணப்ப இறுதி திகதி டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புலமைப்பரிசில் விண்ணப்பத்தை www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விபரங்களை 0112 365 471 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது பணியகத்தின் இணையத்தளமான www.slbfe.lk ஐப் பார்வையிடுவதன் மூலமோ பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் தொகை
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையின் பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.
இதன்படி உதவித்தொகை மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு 25,000ரூபாவும், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற குழந்தைகளுக்கு 30,000ரூபாவும் , உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்கள் அல்லது பிற பாடநெறிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்குத் தகுதி பெற்ற பிள்ளைகளுக்கு 40,000 ரூபாவும் வழங்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![பேரழிவுக்கு ஆளான லாஸ் ஏஞ்சல்ஸ்! விரைந்தது கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் - ஜஸ்டின் ட்ரூடோ](https://cdn.ibcstack.com/article/55a9de01-1060-4d35-80fd-11426b16d4a9/25-67834df086d1c-sm.webp)
பேரழிவுக்கு ஆளான லாஸ் ஏஞ்சல்ஸ்! விரைந்தது கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் - ஜஸ்டின் ட்ரூடோ News Lankasri
![numerology: இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தான் ஆண்களின் கனவு கன்னிகளாம்... உங்க திகதி என்ன?](https://cdn.ibcstack.com/article/b894c83f-b610-4375-b7c2-6f08de875af9/25-678359c95dd70-sm.webp)
numerology: இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தான் ஆண்களின் கனவு கன்னிகளாம்... உங்க திகதி என்ன? Manithan
![75 ரன்னுக்கு 7 விக்கெட்..தனியாளாக 90 ஓட்டங்கள் விளாசி அணியை காப்பாற்றிய மேக்ஸ்வெல் (வீடியோ)](https://cdn.ibcstack.com/article/9d713146-e8d1-4580-9b00-98766b5d8d3b/25-67839793d02e6-sm.webp)