அரசுக்கு மக்கள் ஆணை வழங்கியது அபிவிருத்திக்கே தவிர அடக்குமுறைக்கு அல்ல: சஜித் பகிரங்கம்

Sajith Premadasa Sri Lanka Government Of Sri Lanka
By Rakesh Nov 05, 2026 03:17 PM GMT
Report

அரசுக்கு மக்கள் ஆணை வழங்கியது நாட்டின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தவே அன்றி அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார்.

ஜனநாயக உரிமையை விரிவுபடுத்த அதிகாரம் கிடைத்தபோதிலும், அரசு மக்கள் வழங்கிய ஆணையை மீறி ஜனநாயக உரிமையைச் சீர்குலைக்கும் வகையில் அடக்குமுறைச் சட்டங்களை இயற்றி வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று(05.11.2026) உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொய்யான தரவு

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசு இன்னமும் பொய்யான தரவுகளின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது.தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி மாதாந்த வறுமைக் கோடு 17 ஆயிரத்து 702 ரூபாயாக வரையறுக்கப்பட்ட போதிலும், இந்தத் தரவுகள் முற்றிலும் தவறானவையாகும்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு ஆணுக்கு 3 ஆயிரத்து 340 கிலோ கலோரிகளும், சுறுசுறுப்பான பெண்ணுக்கு 2 ஆயிரத்து 680 கிலோ கலோரிகளும் தேவைப்படுகின்றன.

அரசுக்கு மக்கள் ஆணை வழங்கியது அபிவிருத்திக்கே தவிர அடக்குமுறைக்கு அல்ல: சஜித் பகிரங்கம் | For Development Not For Oppression Sajith

இவ்வாறான தவறான தரவுகளின் அடிப்படையில் வறுமைக் கோடு தயாரிக்கப்பட்டுள்ளதிலிருந்தே இந்த அரசு முற்றாகத் தோல்வியடைந்துள்ளது என்பது புலப்படுகின்றது.

நாட்டில் 30% முதல் 40% வரையான மக்கள் கடுமையான வறுமையில் வாடுகின்றனர். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்குப் பதிலாக வேலையின்மையே அதிகரித்து வருகின்றது.

அடக்குமுறைக் கொள்கைகள்

அரசாங்கத்தின் இத்தகைய அடக்குமுறைக் கொள்கைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைக் கூட இலங்கை இழக்க நேரிடலாம் என எச்சரிக்கின்றேன்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் தொடர்ச்சியாகப் பொய் சொல்லும் ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலாக இந்த அரசே திகழ்ந்து வருகின்றது.

அரசுக்கு மக்கள் ஆணை வழங்கியது அபிவிருத்திக்கே தவிர அடக்குமுறைக்கு அல்ல: சஜித் பகிரங்கம் | For Development Not For Oppression Sajith

பயங்கரவாதத் தடைச் சட்டமானது அரசை விமர்சிப்பவர்களை அடக்குவதற்காகவே கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சியில் இருந்த சமயம் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், இன்று அவர் அங்கம் வகிக்கும் அதே அரசே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையும் தாண்டிய கொடூரமான அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அன்று 'இருள் அரசுகள்' குறித்துப் பேசியவர்கள், இன்று தாங்களே ஒரு இருள் அரசை நடத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் முறைகேட்டில் சிக்கிய முன்னாள் ஆளுநர் - இழப்பீடு வழங்க உடனடி உத்தரவு

எரிபொருள் முறைகேட்டில் சிக்கிய முன்னாள் ஆளுநர் - இழப்பீடு வழங்க உடனடி உத்தரவு

வடக்கு- கிழக்கு மற்றும் மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடல்

வடக்கு- கிழக்கு மற்றும் மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடல்

மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US