தொல்லியல் சார்ந்த சின்னங்களுக்கு எதிராகச் செயல்படுமிடத்து அதற்குப் பிணை இல்லை: எம்.ஏ.சுமந்திரன்

M A Sumanthiran Sri Lanka
By Kajinthan Mar 28, 2023 11:00 AM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குக் கூட பிணையுள்ளது ஆனால் தொல்லியல் சார்ந்த சின்னங்களுக்கு எதிராகச் செயல்படும் இடத்து அதற்குப் பிணை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (27.03.2023) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நாங்கள் பல வருடமாகச் செய்து வந்திருக்கின்றோம். நீதிமன்றங்களிலும் இது சம்பந்தமான விடயங்களை எடுத்து இருக்கின்றோம்.

தொல்லியல் சார்ந்த சின்னங்களுக்கு எதிராகச் செயல்படுமிடத்து அதற்குப் பிணை இல்லை: எம்.ஏ.சுமந்திரன் | For Archeological Symbols

தொல்லியல் திணைக்களம்

ஆனால், இது ஒரு விசேட சட்டம். நாட்டிலே இருக்கின்ற எல்லா சட்டங்களிலும் பார்க்க இந்த சட்டத்தில் மட்டும் தான் பிணையே வழங்க முடியாது. மற்றது எவ்வளவு மோசமான குற்றச் செயல்களில் இருக்கின்ற எல்லா சட்டங்களிலும் ஒரு நீதிமன்றம் பிணை வழங்க முடியாது என்று சொன்னால், அதற்கு மேலே இருக்கின்ற நீதிமன்ற, அல்லது அதற்கும் மேலே இருக்கிற நீதிமன்றத்திடம் நியாயாதிக்கம் கொடுக்கப்படும்.

பயங்கரவாத தடை சட்டத்துக்குக் கீழே கூட மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கலாம் என்ற ஏற்பாடு ஒரு திருத்தமாகக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. தொல்லியல் திணைக்களத்தின் உடைய ஒரு அத்தியட்சகர் ஒரு கல்லை இது தொல்லியல் அடையாளம் என பிரகடனப்படுத்தி விட்டால் அதைச் சேதப்படுத்திய குற்றத்துக்குப் பிணையே கிடையாது.

நான் இதை ஏன் சொல்கின்றேன் என்றால் அந்த அளவிற்கு ஒரு விசேடமான அதிகாரங்களை தொல்லியல் திணைக்களத்திற்குக் கொடுப்பதற்கான சட்டம் நாட்டிலே இருக்கிறது. அதன் காரணமாக நீதிமன்றங்களையும் அதை மீறிச் செயல்பட முடியாதவாறு இந்த திணைக்களம் முடக்கி வைத்திருக்கிறது.

இது உண்மையாக தொல்லியல் திணைக்களம் அல்ல, இது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைத் திணிப்பதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு திணைக்களம். ஆகையாலே நாங்கள் இதுவரைக்கும் செய்த முயற்சிகள் பல பலனில்லாமல் போனதற்கான காரணமும் அதுவாக இருக்கிறது.

தொல்லியல் சார்ந்த சின்னங்களுக்கு எதிராகச் செயல்படுமிடத்து அதற்குப் பிணை இல்லை: எம்.ஏ.சுமந்திரன் | For Archeological Symbols

தமிழ் பேசும் மக்கள்

ஆகையினால் தொடர்ச்சியாக அதே வழியை மட்டும் பின்பற்றாமல் வேறு வழிகளிலேயும் தொல்லியல் திணைக்களத்துக்கு எதிரான எங்களுடைய முயற்சிகளை நாங்கள் எடுப்போம். இதைப் பற்றி நாங்கள் ஜனாதிபதியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் அண்மைக்காலத்திலும் கூடச் சொல்லி இருந்தோம். அதற்கெல்லாம் அவர்கள் சொல்கின்ற பதில் வடக்கு கிழக்கில் மாத்திரம் இந்த பிரச்சினை இல்லை இது நாடு பூராவும் இருக்கிறது.

அரசாங்க கட்சியில் இருக்கின்றவர்கள் கூட தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராகப் நாடாளுமன்றத்திலே பல விடயங்களை எழுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அது ஒரு வகையானது.

வடக்கு கிழக்கிலே தொல்லியல் திணைக்களம் செய்கின்ற செயற்பாடு வேறு வகையான ஒரு செயற்பாடு. அங்கே இருக்கின்ற குடிப்பரம்பலை மாற்றி அமைப்பதற்கு, அங்கே பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் திணிப்பதற்குமான ஒரே நோக்கத்தோடு இந்த செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. ஆகையினால் இது சம்பந்தமாக மிகத் தீவிரமான நடவடிக்கைகளை வருகின்ற நாட்களிலே நாங்கள் எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US