ராஜபக்சர்களை குறி வைத்து பழிவாங்கும் பொன்சேகா..!
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைகளை அடுத்து அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்களின் ஊடாக ஒரு காலத்தில் கோலோச்சிய பல முன்னாள் பிரபல அரசியல்வாதிகள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
பலர் செயற்பாட்டு அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கியுள்ள நிலையில் இப்படியானவர்களில் மிக முதன்மையானவராக சரத் பொன்சேகா மாறியிருக்கின்றார்.
போர் நிறைவுற்றதன் பின்னர், அதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி தேர்தலின் ஊடாக அரசியல் அவதாரம் எடுத்த பொன்சேகாவுக்கு ராஜபக்சர்கள் தங்களுடைய வழக்கமான பாணியில் சிறையிலடைத்து பழிவாங்கிச் சென்றனர்.
ஆனாலும் அதனையும் கடந்த அடுத்த அரசாங்களின் ஊடாக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று மாறினாலும் கூட உட்கட்சி மோதல்களாலும் முரண்பட்டு கட்சிகளுக்குள் இருந்து வெளியேறிச் சென்றார்.
இப்படியான நிலையில், தற்போது பல இணைய ஊடகங்களுக்கு செவ்வி வழங்கும், பல ஊடகவியலாளர்கள் சந்திபபுக்களை நடத்தும் சரத் பொன்சேகா சர்ச்சைக்குரிய கருத்துக்களை குறிப்பாக இறுதி யுத்தக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை, ராஜபக்சர்களின் கோர முகங்களை பொது வெளியில் வெளிப்படுத்தி வருகின்றார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி..
சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri