ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கில் நஷ்டம்
2024/2025 ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2,735 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, 2023/24 ஆம் நிதியாண்டில் 7,925 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது.
மில்லியன் ரூபா நஷ்டம்
அதன்படி, 2023/24 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2024/25 ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி இலாபம் குறைந்ததே இதற்கு காரணம் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023/24 ஆம் ஆண்டில் 26,717 மில்லியன் ரூபாவாக இருந்த அந்நியச் செலாவணி இலாபம் 2024/25 ஆம் ஆண்டில் 3,925 மில்லியன் ரூபாவாக குறைவடைந்தது.
டொலர் பெறுமதி அதிகரிக்கும் போது அந்நியச் செலாவணி இலாபம் குறைவடைகிறது. இதனால் இலாபம் நஷ்டமாக மாறுகிறது என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri