கென்யா மற்றும் சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு: 40 பேர் உயிரிழப்பு
கென்யா மற்றும் சோமாலியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதுடன் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.
அத்துடன் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் அவசர நிலை பிறப்பித்துள்ளதுடன் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
அவசர மற்றும் மீட்பு
சோமாலியாவில் கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. தற்போது அங்குள்ள ஜூபாலாந்து மாகாணத்தில் கனமழை பெய்தது.
ஜூபா மற்றும் ஷாபெல்லே ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 25 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், ஜூபா மற்றும் ஷபெல்லே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஜூபாவின் முழுப் பகுதியிலும் வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.
லுக் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 2,400 குடியிருப்பாளர்களை அடைய அவசர மற்றும் மீட்புப் படையினர் முயற்ச்சித்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 21 மணி நேரம் முன்

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
