விற்பனை செய்யப்படும் தபால் நிலையங்கள்! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்
விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தபால் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக இந்த இரண்டு நாள் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
விடுமுறைகள் ரத்து
நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஒன்றிணைந்த தபால் முன்னணியின் அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் தபால் பணியாளர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் தபால் பணியாளர்கள் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri