ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாட்டு மக்களுக்கு விசேட உரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க ஆகியோர் இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரைகளை ஆற்ற உள்ளனர்.
ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தேர்தல் முறை மாற்றம், தேசிய தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் முரண்பாடு
புதிய தேர்தல் முறை ஒன்றின் அடிப்படையில் தேசிய தேர்தல்களை நடத்த முடியுமா என கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை நாட்டின் கிரிக்கெட் துறையில் நிலவிவரும் நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்தி இடைக்கால குழு ஒன்றை நியமித்தமை தொடர்பில் அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam
