மகாவலி கங்கை மற்றும் களுகங்கை அண்டிய பிரதேசங்களில் வெள்ள அபாயம்
மகாவலி கங்கை மற்றும் களுகங்கை ஆகியவற்றை அண்டிய பிரதேசங்களில் இலேசான வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மகாவலி கங்கை படுகை மற்றும் பஸ்பாகே கோரளை பிரதேசப் பிரிவுகளில் இலேசான வெள்ள அபாயம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு
மகாவலி கங்கையின் மேற்புற பிரதேசங்களுக்கு கடந்த சில மணிநேரங்களில் பெய்த கனமழை காரணமாக இந்த வெள்ள அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக களு கங்கை படுகையில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள திணைக்களம்இ அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பெல்மதுல்ல, நிவிதிகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத ஆகிய தாழ்வான பகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, மதுராவல, பாலிந்தனுவர ஆகிய தாழ்வான பகுதிகளிலும் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்குறித்த பிரதேச மக்களும், அவ்வழியாகச் செல்லும் வீதிகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களும் இதுகுறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam