புத்தளத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ்நிலப் பகுதிகள்
புத்தளம் (Puttalam) மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக அப் பகுதியிலுள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் கடும் மழையினால் புத்தளத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளான கடையாக்குளம், தில்லையடி, ரத்மல்யாய, பாலாவி, குவைட் நகர் உள்ளிட்ட பல பிரதேசங்கள் நேற்றிரவு (18.05.2024) முதல் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள்
இதன் போது, வீடுகளுக்குள் வெள்ள நீர் உற்புகுந்துள்ளமையினால் சுமார் 150இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சில குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புத்தள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam