மட்டக்களப்பு மாவட்டமக்களுக்கு வெள்ள அனர்த்தத்தை தணிக்கும் திட்டங்கள் தொடர்பில் வெளியான தகவல்

Flood Sri Lanka Batticaloa People Allocation of funds
By Rusath Dec 05, 2021 08:17 AM GMT
Report

 மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலமை அறிந்து வெள்ள அனர்த்தத்தை தணிக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கின்ற பட்சத்தில் வருடாந்தம் பல மில்லியன் ரூபா நிதி வெள்ள பாதிப்புக்களுக்கும், அதன் பின்னர் எற்படும் உட்கட்டுமானங்களுக்கும் செலவு செய்ய வேண்டிய நிலைமை குறைக்கப்படும் என சூழலியலாளர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

வடகீழ் பருவப் பெயர்சி ஆரம்பித்துவிட்டாலே மட்டக்களப்பு மாவட்டமக்களுக்கு வெள்ள அனர்த்த பயமும் ஆரம்பித்துவிடும் எனலாம். இந்நிலையில் கடந்த வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இருந்து எழுத்து மூலமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 2019 ஆம் ஆண்டில் 19263 குடும்பங்களைச் சேர்ந்த 66673 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2 பேர் காயமடைந்திருந்தனர். அதன்போது 27 இடைத்தங்கல் முகாம்களில் 1285 குடும்பங்களைச் சேர்ந்த 4134 நபர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 17978 குடும்பங்களைச் சேர்ந்த 62602 நபர்கள் உறவினர்கள் மற்றும் வேறு வீடுகளில் தங்கியிருந்தனர். இதன்போது 17885 குடும்பங்களைச் சேர்ந்த 60465 நபர்கள் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அக்காலப்பகுதியில் 20 நாட்கள் அரசாங்கத்தால் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டிருந்தன.

2019 ஆம் ஆண்டில் சமைத்த உணவுகளுக்காக 1,750,898.36 ரூபாவும், பாதிக்கப்பட்ட உலர் உணவு வினியோகத்திற்காக 25,706,517.89 ரூபாவும், பொருட்களுக்காக 37,672. ரூபாவுமாக மொத்தமாக இம்மாவட்டத்தில் 27,495,088.25 ரூபா 2019 இல் செலவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இம் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 11281 குடும்பங்களைச் சேர்ந்த 35808 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 4622 குடும்பங்களைச் சேர்ந்த 14631 நபர்கள் உறவினர்கள் மற்றும் வேறு வீடுகளில் தங்கியிருந்தனர்.இதன்போது 4542 குடும்பங்களைச் சேர்ந்த 14374 நபர்கள் பயனாளிகளாத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அக்காலப்பகுதியில் உலர் உணவு விநியோகத்திற்காக 6,427,800 ரூபாவும், வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பிரதான வீதிப் போக்குவரத்து சேவைகளுக்காக 25,000 ரூபாவும், துண்டிக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கான படகு சேவைகளுக்காக 156,784 ரூபாவும், வெள்ள நீர் தடைப்பட்ட பகுதிகளுக்கான ஜே.சி.பி, வேலைகளுக்கான கொடுப்பனவு 41,600 ரூபாவுமாக மொத்தமாக 2020 ஆம் ஆண்டில் 6,651,184 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் வடகீழ் பருவகால நிலையினால் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த திட்டம் மாட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டு காலப்பகுதியில் இம்மாவட்டத்தில் எவ்வித உயிர் இழப்புக்களும், ஏற்படாத வகையில் முப்படைகளின் உதவியுடன், முன்னாயத்த நடவடிக்கைகள் அரசாங்க அதிபரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக மட்டக்களப்பு கச்சேரியில் இருந்து செயற்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஸியாத் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மில்லியன் கணக்கான நிதிச் செலவுகளும், இடம்பெயர்வுகளும். இன்னல்களும், அவற்றுக்கு ஈடுகொடுக்கும் செயற்பாடுகளும், வருடாவருடம் இடம்பெற்று வருகின்றன. அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் பருவகால மழை வீழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்தம் தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் விசேட கலந்துரையாடல் அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US