பெண் ஒருவரின் தங்க சங்கிலி அறுப்பு! ஐவர் கைது
மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி ஒன்றை அறுத்து கொள்ளையடித்த ஐந்து பெண்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி வாராந்த சந்தையில் நேற்று (07) பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வாராந்த சந்தை வழமைபோல இடம்பெற்றது. இதன்போது மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அங்கு சென்ற 60 வயதுடைய பெண் ஒருவர் மரக்கறிகளை கொள்வனவு செய்துகொண்டிருந்தபோது அப்பெண்ணின் சங்கிலியை சந்தேக நபர்கள் அறுத்து எடுத்தபோது அவர் சத்தமிட்டதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சந்தேக நபர்களை மடக்கி பிடித்தனர்.
இதனையடுத்து பொதுமக்களால் பொலிஸார் வரவழைக்கப்பட்டு குறித்த பெண்ணிடம் அறுத்தெடுத்த தங்க சங்கிலியை மீட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை டிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 தொடக்கம் 50 வயதுடையவர்கள் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களை இன்று (08) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
