இலங்கையில் பதிவாகும் சிறுநீரக நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகள் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் தரவுகளின் படி நாட்டில் நாள்பட்ட சிறுநீரக நோய்க்குள்ளானவர்கள் 213,448 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே ஆண்டில் 1,626 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகள்
2023 - 2024 ஆம் ஆண்டில் டயாலிசிஸ் எனப்படும் கூழ்மப்பிரிப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,582 ஆக காணப்படுகிறது.

மேலும் சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 300ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 2006ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan