ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று(30.01.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வழக்கில் தொடர்புப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், 'சதொச' நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு அடிப்படையில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan