500 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியரின் உருக்கமான கருத்து
காசா போரில் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டு சுமார் 500 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட சாஷா ட்ரூஃபனோவ் என்பவரின் கருத்து ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றும் சாஷா, 498 நாட்கள் சிறைபிடிக்கப்பட்ட பிறகு 2025 பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த திங்களன்று உயிரிழந்த கடைசி இஸ்ரேலிய பிணைக்கைதியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, "இப்போதுதான் தம்மால் நிம்மதியாக மூச்சுவிட முடிகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிணைக் கைதி
கிட்டத்தட்ட 500 நாட்களில் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே அவர் சக பிணைக் கைதிகளைப் பார்த்துள்ளார்.
ஏனைய நாட்களில் இருண்ட சுரங்கப்பாதைகளில் தனியாக அடைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், கால்களில் துப்பாக்கிச் சூடு, தலையில் தாக்குதல் மற்றும் முறையான மருத்துவ சிகிச்சை இன்றி அவர் அவதிப்பட்டார்.
தாக்குதல்
தடுப்பில் வைக்கப்பட்டிருந்தபோது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும், இரகசிய கேமரா கண்காணிப்புக்கும் ஆளானதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, காசாவை மறுசீரமைப்பது முக்கியம் என்றாலும், மீண்டும் ஒரு தாக்குதல் நடக்காது என்பதை உறுதி செய்வதே முதன்மையானது என்று கருத்துவதாக சாஷா கூறியுள்ளார்.