60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வார நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படும் - கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் ஐந்து நாட்களும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலாவது அல்லது இரண்டாவது தடுப்பூசியினை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வார நாட்களில் காலை 8 மணி முதல் 12 வரை செலுத்திக் கொள்ள முடியும்.
அத்தோடு வரும் வாரமளவில் இத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களைச் சேர்ந்த கோவிட் மரணங்கள் 25 பதிவாகியுள்ளன.
இதில் 14 பேர்
எவ்வித தடுப்பூசியினையும் செலுத்திக் கொள்ளாதவர்கள். 7 பேர் ஒரு
தடுப்பூசியினை மாத்திரம் செலுத்திக் கொண்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.



