கப்பலுடன் மோதிய மீன்பிடி படகு : ஒரு மீனவரை காணவில்லை
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடல் தொழிலுக்கு சென்ற முத்து குமார என்ற ஆழ்கடல் மீன்பிடி படகு, கப்பல் ஒன்றுடன் மோதியதில் படகில் இருந்த மீனவர் ஒருவர், கடலுக்குள் விழுந்து காணாமல் போயுள்ளார் என பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படகில் இருந்த ஏனைய மூன்று மீனவர்கள் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் வேறு படகில் ஏறிய பின்னர் சம்பவம் குறித்து பேருவளை மீன்பிடி கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் அதன் ஊடாக படகின் உரிமையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்கு உள்ளான ஆழ்கடல் மீன்பிடி படகு தற்போதும் கடலில் மிதந்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படகு பேருவளை தல்லஹேன பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பேருவளை வலத்தர பிரதேசத்தை சேர்ந்த கே.பி. நாவிந்த பெரேரா என்ற மீனவரே காணாமல் போயுள்ளார்.



