ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் சத்தியாகிரகப் போராட்டம்
தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது முறையான தீர்மானங்களோ அரசால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்றொழிலாளர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகச் சத்தியாகிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்கும் வரை இன்றும்(22) நாளையும் அவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே தங்கியிருந்து இந்தப் போராட்டத்தைத் தொடரத் தீர்மானித்துள்ளனர் என்று அகில இலங்கை கடற்றொழில் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சத்தியாகிரகப் போராட்டம்
நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கடற்றொழில் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதுடன், தமக்கான நிரந்தரத் தீர்வை ஜனாதிபதி பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri