எதிர்ப்பு போராட்டத்தில் குதித்த வாழைச்சேனை படகு உரிமையாளர்கள்(Photos)

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Navoj Sep 28, 2023 04:29 PM GMT
Report

தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக பகுதியில் மீன்பிடி தொழில் மேற்கொள்ளும் படகு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறைமுகம் முன்பாக இன்றையதினம்(28.09.2023) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுக நிர்வாகம் மற்றும் மீன்பிடி திணைக்களம் என்பவற்றுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு


கோரிக்கைகள்

வெசல் மொனிட்டரிங் சிஸ்டம் (VMS) கட்டணம் தொடர்பாகவும், ஐஸ் கட்டியின் விலை அதிகரிப்பு, தரமான வலை கிடைப்பதில்லை, துறைமுக இடம் பற்றாக்குறையாகவுள்ளதை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெசல் மொனிட்டரிங் சிஸ்டம் (VMS) என்ற கருவியை அவுஸ்திரேலிய அரசாங்கம், கடத்தல்களை கட்டுப்படுத்தும் திட்டத்தில் படகுகளை கண்கானிக்கும் நோக்கில் இலவசமாக வழங்கப்பட்ட கருவிகளுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா அறவிடுவதும் அப்பணத்தினை செலுத்தாத பட்சத்தில் படகு தொழிலுக்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

பொருளாதார பிரச்சினை

இதன்போது படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தில் சுரண்டாதே, துறைமுக குறைபாடுகளை நிவர்த்தி செய், வி.எம்.எஸ். கட்டணம் செலுத்த முடியாது, ஐஸ் விலையை குறை என்று எழுதப்படட பதாதைகளை சுமந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு போராட்டத்தில் குதித்த வாழைச்சேனை படகு உரிமையாளர்கள்(Photos) | Fishermen Protest In Valaichenai

துறைமுகத்தில் முப்பத்தி நாலு அடி படகுகளை திருத்துவதற்கு கரைக்கு எடுப்பதற்கு ஏற்கனவே இருந்த கட்டணம் 10500 ரூபா பெறப்பட்ட போதும் தற்போது அந்த கட்டணம் 28000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த கட்டணத்தையும் தங்களுக்கு குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

நாங்கள் ஒரு வருடத்திற்கு 150,000க்கு அதிகமாக மேலதிகமாக செலவளிக்க வேண்டி உள்ளது காரணம் வி.எம்.எஸ். கட்டணம், துறைமுக நங்கூர பணம் போன்ற செலவுகள்.

மீன்பிடி துறைமுகத்தில் ஏறத்தாள 150 படகுகளுக்கு மேல் நிறுத்த இடம் போதாது ஆனால் எங்கள் பிரதேசத்தில் ஐநூறு படகுகள் உள்ளது.

இதனால் நாங்கள் வேறு இடங்களில் வாடகை செலுத்தி தங்கியுள்ளோம். இதேநேரம் துறைமுகத்திற்கும் வாடகை செலுத்துவதால் ஒரு விடயத்துக்கு இரண்டு வாடகை செலுத்த வேண்டி உள்ளது.

எனவே துறைமுகத்தில் படகு கட்டும் இடத்தினை நீளமாக்கி தந்தால் வேறு இடத்தில் படகு கட்ட வேண்டிய தேவை ஏற்படாது.

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : தோழி வெளியிட்ட தகவல்

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் : தோழி வெளியிட்ட தகவல்

துறைமுக நிர்வாகத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செலவுகளால் மீன்பிடி தொழிலை முன்னெடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. ஆகையால் படகு உரிமையாளர்களாகிய எங்களுக்கு தகுந்த தீர்வினை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட படகு உரிமையாளர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர்களை பெற்றுக்கொள்ள எந்த அதிகாரிகளும் சமூகமளிக்காத நிலையில் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.  

அம்பாறையில் கோர விபத்து: இருவர் படுகாயம்

அம்பாறையில் கோர விபத்து: இருவர் படுகாயம்


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US