அம்பாறையில் கோர விபத்து: இருவர் படுகாயம்
அம்பாறை - அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் திருக்கோவில் பிரதான வீதி தம்பிலுவில் பிரதேசத்தில் இன்று (27.09.2023) மாலை 5.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் லொறி ஒன்றுடன் மோட்டர்சைக்கிள் ஒன்று மோதியே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவிலை நோக்கி பயணித்த மோட்டர்சைக்கிளும் தம்பிலுவில் பிரதான வீதிக்கு அருகில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது மோட்டர்சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
