யாழ்.இந்திய துணை தூதரகத்திற்கு முன் பதற்றம்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இந்திய இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று (22.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
இதனையடுத்து, இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸார் கடற்றொழிலாளர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயன்றும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக தமது வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி கடற்றொழிலாளர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |