வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் செயற்குழுக் கூட்டம்
வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்றையதினம்(9) யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம்பெற்றது.
அரசாங்கத்தினால் மக்கள் விருப்பங்களுக்கு மாறாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தக்கோரி முல்லைத்தீவில் மாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளதாக கடற்றொழில் இணையத்தின் செயலாளர் எம்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கைது
தற்போது அரசாங்கத்தினால் வடபகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் செயலாளர் எம்.எம்.ஆலம், மன்னாரில் நிறுவப்படும் காற்றாலை மற்றும் மணல் அகழ்வினால் மன்னார் மாவட்டம் கடலினுள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினர்.

அத்துடன் சட்டவிரோத கடற்றொழிலில் பிடியில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை அரசாங்கம் கைது செய்து வருவது வரவேற்கத்தக்கது.
நேற்றையதினமும் எல்லைதாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதிய கடற்றொழில் அமைச்சர் செயற்பாடுகள் பல வரவேற்கத்தக்கன. இருப்பினும் இந்திய கடற்றொழிலாளர்களின் முழுமையான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.