மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..
புதிய இணைப்பு
புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் சற்று முன்னர் பதவியேற்றனர்.
அதன்படி, அமைச்சர்களாக
பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர்
அனுர கருணாதிலக்க - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்
எச்.எம். சுசில் ரணசிங்க - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
அனில் ஜெயந்த பெர்னாண்டோ - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
டி.பி. சரத் - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்
எம்.எம். முகமது முனீர் - மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர்
எரங்க குணசேகர - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
முதித ஹன்சக விஜயமுனி - சுகாதார பிரதி அமைச்சர்
அரவிந்த செனரத் விதாரண - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
எச்.எம். தினிது சமன் குமார - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
முதலாம் இணைப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இன்றையதினம் காலை 10 மணியளவில் இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
புதிய அமைச்சரவை
பல அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தோடு இணைந்த அபிவிருத்தி இலக்குகளின் செயல்திறனை விரைவுபடுத்தும் நோக்கில் இவ்வாறு அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




