கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் பிரதிநிதிகளுக்கு இடையில் உயர்மட்ட சந்திப்பு
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது கொழும்பிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதன்போது, கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
உடனடி நடவடிக்கை
இதில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களின் பாதிப்புகள் தொடர்பாகவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், தொழில் முறையை ஒழுங்கு படுத்தக் கோரியும் கருத்து முன்வைக்கப்பட்டது.

அனர்த்த காலங்களில் கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், மீன்பிடி சட்டம் மற்றும் மீன்பிடி கொள்கை தொடர்பாகவும் உரையாடப் பட்டதாக தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.