சுரேஷ் சலேவிடம் சிக்கிய நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்
2007 ஆம் ஆண்டு ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு சிறையில் நடந்த சித்திரவதை சுரேஷ் சலேவிற்கு தெரியாதா என பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு, தமிழன் என்ற ரீதியில் தான் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைப் படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.மேலும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தன்னை அழைத்து சென்று ஆடைகளைக் களைந்து துப்பாக்கியை வாய்க்குள் வைத்து தலை கீழாக் கட்டி தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தன்னைத் தாக்கிய அதிகாரிகள் மது போதையில் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்தோடு, தன்னோடு சிறையில் பாதுகாப்பு கருதி வந்து இருந்த 14 வயது சிறுவன் ஒருவனும் சாட்சி சொன்னதாக கூறி பருத்தித்துறையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவங்கள் மனித மீறல்கள் என்று சுரேஷ் சலேவிற்கு தெரியாதா, சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், இராணுவத்தினருக்கு ஒரு சட்டம் தமிழருக்கான நீதியில் மற்றுமொரு சட்டமா என பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
தற்போது சிறையில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதாக கூறியுள்ளார்.தமிழர்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதையை விடவா அவர் அனுபவிக்கின்றார் எனவும் குறித்த நபர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சுரேஷ் சாலைவிடம் சிக்கிய நபர் கூறிய பல முக்கியமான விடயங்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.