பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 21 வயதுடைய இளைஞர் கைது!
அம்பாறை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(05.10.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்மாந்துறை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட குறித்த இளைஞரை சோதனையிட்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, அவரது உடமையிலிருந்து 4 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய குறித்த இளைஞர், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.