தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர் கைதின் எதிரொலி : ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இராமேஸ்வரத்திலிருந்து கடற்றொழிலில் ஈடுபட செல்லும் கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல்
எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் எனவும், உயிர்காக்கும் உபகரணங்களை கையில்
வைத்துக் கொள்ளுமாறு இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி
மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கடந்த ஒரு வாரத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவதன் எதிரொலியாகவே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கடற்றொழிலில் ஈடுபட சென்ற 22 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்ததை கண்டித்து இன்று(26.06.2024) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை இது குறித்து கடற்றொழிலாளர்களடம் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட முல்லைத்தீவு விஜிந்தன் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கை கடற்படை
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை கடற்றொழிலில் ஈடுபட சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்து 22 கடற்றொழிலாளர்களையும் எல்லை தாண்டி பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து நேற்று 10 நாகை கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழக கடற்றொழிலாளர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்து வருவதால் கடற்றொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்து கடலுக்கு கடற்றொழிலில் ஈடுபட சென்ற இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களுக்கு இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி உத்தரவின் பேரில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாக “இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் கடற்றொழிலில் ஈடுபட செல்லக்கூடாது, உயிர் காக்கும் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும், கடற்றொழிலாளர் அடையாள அட்டை மற்றும் படகின் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு” எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |