ஆயிரம் முதல் ஒன்பதாயிரம் ரூபா வரை விற்பனையாகும் கணையான் வகை மீன்
அம்பாறை மாவட்டத்தில் கணையான் வகை மீன் அனங்கள் அதிகளவில் பிடிக்கப்படுவதுடன், மக்களும் இந்த மீன்களை கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கணையான் மீன் இனங்கள் அம்பாறை மாவட்டத்தின் பிராந்திய ஆற்றோரங்களில் பிடிபடுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் இருந்து 3 வகையான கணையான் வகை மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படுகின்றன.
பிடிபடும் பாரிய மீன்கள்
சுமார் 5 முதல் 25 கிலோகிராம் எடையுள்ள பாரிய கணையான் மீன் இனங்களே இவ்வாறு மீனவர்களிடம் சிக்குவதாக தெரியவருகிறது.
இவ்வகையான மீன்கள் ஆயிரம் ரூபா முதல் ஒன்பதாயிரம் ரூபா வரையில் விற்பனையாகி வருவதுடன் பொதுமக்களும் ஆர்வத்துடன் கொள்வனவில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பகுதிகளில் இவ்வாறான மீன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.









உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
