அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் இரணைமடு குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சியின் பயனாக நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப் பாதுகாப்பினை உறுதிப்பத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்று(29)காலை 11.30 மணியளவில் இரணைமடு மீனவர்சங்க மண்டபத்தில் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் கெ.சங்கீதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கடைத்தொகுதி அங்குரார்ப்பணம்
USAID நிறுவனத்தின் 2024 ஆண்டுற்கான சமூக சேவையினை வலுவுட்டுவதற்கான நிதி பங்களிப்போடு தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக மீன்குஞ்சுகள் விடப்படுவதுடன் சிறுவர் பூங்கா ஒன்றும் திறந்து வைக்கப்பட்டு மீனவர்கள் மீன் விற்பனை செய்யும் கடைத்தொகுதியும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்ட
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், ஈழமக்கள் ஜனநாயக
கட்சி உறுப்பினர்கள் மற்றும் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டுடிருந்தனர்.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







