யாழில் முதன் முதலாக இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு

Culture Jaffna Research Teaching
By Independent Writer Jan 06, 2022 07:13 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

பல்கலைக்கழகங்களில் பிரதான பணிகளாக கற்பித்தல், ஆராய்ச்சி கலச்சாரம் போன்றவை முதன்மைப்படுத்தப்படுகின்றதென கலைப்பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

“சமத்துவம், சமநீதி மற்றும் அபிவிருத்திக்கான மானுடவியல் சமூக விஞ்ஞானம்” எனும் தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வரங்கில் கடந்த வருடம் கலைப் பட்டதாரிகளாக வெளியேறிய சுமார் 100 மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இந் நிகழ்வு தொடர்பில் ஊடகங்களினூடாகப் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பு இன்று காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதன்போது கலைப் பீடாதிபதி பேராசிரியர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் கலைத்துறை அதாவது சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடக் கற்கைகள் கற்பிக்க ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன.

இலங்கையில் பல்கலைக்கழக கல்வி குறித்து சிந்தித்த இலங்கைக் கல்விமான்கள் தேசிய அடையாளம், பண்பாடு மற்றும் மரபுத் தொடர்ச்சிகள் குறித்து அதிகம் அக்கறை எடுத்திருந்த காரணத்தினால் இலங்கையில் விஞ்ஞானம் சார் கற்கைகள் வளர்ச்சியடைந்தமைக்கு மேலாக கலைத்துறை சார்ந்த சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதப் பண்பியல் கற்கைகள் அதிகம் வளர்ச்சியுற்றன.

இதன் பின்னணியில் மூத்த இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கலைப்பீடங்களினதும், அவற்றின் ஆசிரியர்களினதும் செல்வாக்கு மேலோங்கியிருந்தமையை இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றை அறிந்தோர் அறிவர். அத்தகைய பல்கலைக்கழகங்களுள் முதன்மையானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாண வளாகமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1979இல் கல்விசார் சுயதீர்மானம் எடுக்கும் வல்லமைமிக்க முழுமையான தனித்த பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்றது.

இப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் அப்போது மனிதப் பண்பியல் பீடமாகவிருந்த கலைப்பீடம் அதிகம் பங்களிப்புச் செய்திருந்தது.

தற்போது இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐம்பதாண்டு நிறைவை நோக்கி நகர்கின்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கருதத்தக்க பல அடைவுகளை அவ்வவ்போது எட்டியவண்ணம் நகர்கின்றது.

அந்தவகையில் எதிர்வரும் 10.01.2021 திங்கட்கிழமை நடைபெறும் இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு மிக கவனத்துக்குரியதாக உள்ளது.

பல்கலைக்கழகங்களில் பிரதான பணிகளாக மூன்று விடயங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன. கற்பித்தல், ஆராய்ச்சி கலச்சாரம் ஊடான அறிவுப் பரவலாக்கம் மற்றும் சமூக ஒன்றிணைவு என்பனவே அவையாகும்.

இவ் விடயங்களை எய்தும் அல்லது வழங்கும் முதன்மைத் தளமாகவிருப்பவை பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் ஆய்வுமாநாடுகள் ஆகும்.

இவற்றுள் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் முழுமையாக ஆய்வாளர்களாக கொண்டு நடத்தப்படும் ஆய்வு மாநாடுகள் பல வகைகளில் முக்கியத்துவமிக்கன.

இந்தப் பின்னணியில் 1ST UNDERGRADUATE RESEARCH SYMPOSIUM IN ARTS – 2021 எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

*“Humanities and Social Sciences for Equality, Justice and Development” *அதாவது சமத்துவம், சமநீதி மற்றும் அபிவிருத்திக்கான மானுடவியல் சமூக விஞ்ஞானம் எனும் மகுடத்துடன் முன்னெடுக்கப்படும்.

இவ் ஆய்வரங்கில் கடந்த வருடம் கலைப் பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களின் 100 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இலங்கையின் உயர்கல்வி மற்றும் அபிவிருத்தியை துரிதப்படுத்தும் செயற்றிட்டமாக உலகவங்கியின் நிதிப்பங்களிப்பில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும்.

எஹெட் எனும் திட்டம் மூலமாக இவ் ஆய்வரங்குக்கான நிதிப்பங்களிப்புச் செய்யப்பட்டுள்ளது. பின்வரும் ஆய்வுத் தடங்களில் ஆய்வரங்கு நடைபெறவுள்ளது.

1. Law and Order

2. Religion and Philosophical Inquiry

3. Language, Literature and Art

4. State, Governance and Media

5. Environment, Economy, Policy Planning and Development

6. History, Heritage and Cultural Diversity

7. Society, Community Participation and Social work

8. Health and Well-being  

கலைப் பீடாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள இவ் ஆய்வரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

மாநாட்டின் சிறப்பு அம்சமாக கைலாசபதி கலையரங்கில் காலை நடைபெறும் அங்குரார்பண நிகழ்வில் திறவுரைகளை ( Keynote Speeches ) பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும் தகைசார் பேராசிரியருமான பேராசிரியர்.வ.மகேஸ்வரன், அமெரிக்காவின் ஸலிபெரி பல்கலைகழக பேராசிரியர்.எஸ்.ஐ. கீதபொன்கலன், கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி சாந்தி செகராஐசிங்கம் மற்றும் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.nஐயசங்கர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

மாலை அமர்வில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பன்னிரு ஆய்வுத் தடங்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. இவ் ஆய்வுத் தடங்களை துறைசார் பேராசிரியர்கள் தலைமை தாங்கவுள்ளனர்.

இன்றைய உலகப் பெருந்தொற்றுக் காலப்பகுதியிலுள்ள பல்வேறு நடைமுறைசார் சவால்களைத் வெற்றிகரமாக முகாமை செய்து எமது பீடம் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை 2021 இல் முன்னெடுத்திருந்தது. அதன் உயர் அடையாளமாக இந்த ஆய்வரங்கு நடைபெறுகின்றது.

வருடம் தோறும் எமது பீடத்தில் சமூக விஞ்ஞானம், மனிதப்பண்பியல், ஆற்றுகைக் கலைகள் மற்றும் காண்பியக் கலைகள் உள்ளிட்ட 26 கற்கைக் பரப்புகளில் ஏறக்குறைய 400 ஆய்வுகள் இளங்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றுள் பெரும்பாலானவை பெறுமதியான ஆய்வுகளாகவிருந்த போதும் அவை மாநாடுகள் அல்லது தரமான ஆய்விதழ்கள் மூலமாக பிரசுரிக்கப்படுவதில்லை. இன்று இந்த ஆய்வரஙகு நூற்றை அண்மித்த ஆய்வுகளின் பிரசுரக்களமாகியுள்ளது.

எமது பீடத்தில் நீண்ட காலமாகவே இத்தகையதொரு ஆய்வரங்கை நடத்தவேண்டும் எனும் எண்ணக் கருவாக்கம் இருந்தபோதும் பல தவிர்க்க முடியாத பின்னணிகளில் இதுவரை அது சாத்தியமாகவில்லை.

ஆனால் இன்று விதையிடப்படும் இவ் ஆய்வரங்கு எதிர்காலத்தில் வருடம் தோறும் நடைபெறவுள்ளதுடன் எமது இறுதியாண்டு மாணவர்கள் தமது ஆய்வு முடிவுகளைச் சமூகப்பரவலாக்கம் செய்யும் வாய்ப்பையும் வழங்கும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சமூகம் சார்ந்த பொறுப்பை பட்டதாரிகள் மட்டத்தில் நிறைவேற்றும் ஒரு தளமாக இவ் ஆய்வரங்கு அமைகின்றது.

அத்துடன் எமது பட்டதாரிகள் ஆய்வுக் கலாசாரத்துக்குள் தம்மை புகுத்திக்கொள்ளவும் இது துணை செய்யும்.

கலைப்பீடம் கற்றல் கற்பித்தல் மற்றும் ஆய்வுக் கலாசாரத்தில் காண்பித்து வரும் அதியுன்னதமான செயற்பாட்டுக்கு இவ் ஆய்வரங்கு ஒரு முக்கிய தளமாக அமைகின்றது.

ஆர்வமுள்ள எவரும் இவ் ஆய்வரங்கில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள முடியும். குறிப்பாக பாடசாலைகளில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் பங்கு பற்றும் போது பல்கலைக்கழகங்கள் குறித்த அவர்களது சிந்தனை இன்னும் ஒரு படி மேலே மேம்படும்.

அத்துடன் பல்கலைக்கழகங்களின் ஆய்வுச் செயற்பாடுகள் குறித்து ஆர்வமுள்ள ஆற்றலாளர்களும் கலந்து கொள்வதனை வரவேற்கிள்றோம்.

மாநாட்டின் பின்னர் பகிர்ந்து கொள்ளப்படும் பின்னூட்டல்கள் அடுத்த தடவை மாநாட்டை இன்னும் சிறப்பாக செய்ய வழிசெய்யும். அந்த வகையில் அனைவரையும் இந்த மாநாட்டுக்கு மாநாட்டுத் தலைவர் எனும் அடிப்படையில் வரவேற்கின்றேன்.

இம் மாநாடு பல்கலைக்கழகத்தின் இணைய மற்றும் யூரியூப் தளங்களிலும், முகநூல் ஊடாகவும் நேரலையாக ஒளிபரப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US