எட்டு ஆண்டுகளின் பின்னர் இங்கிலாந்து மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ள இலங்கை
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
எட்டு ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆடுவதற்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி கடும் சவாலுக்கு மத்தியிலேயே இந்த டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளது
குறித்த போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சி
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள பதினொருவரின் விபரங்களை நேற்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டது.
இதன்படி முதலாவது டெஸ்ட் போட்டியில் நிசான் மதுஷ்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெத்யூஸ், தனஞ்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
அத்துடன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான மிலான் ரத்நாயக்க இன்று இலங்கை அணிக்காக டெஸ்ட் அறிமுகத்தைப் பெறவுள்ளார்.
We lose the toss ? and bowl ? first at @EmiratesOT! ?
— England Cricket (@englandcricket) August 21, 2024
??????? #ENGvSL ?? | #EnglandCricket
Live Match Centre ? ?
டெஸ்ட் கிரிக்கெட்
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து புதிதாக பாஸ்பால் கிரிக்கெட் பாணியை பின்பற்றி வரும் நிலையில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் செயற்பாடுவது கட்டாயமாக உள்ளது.
கடைசியாக நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3–0 என முழுமையாக வெற்றி பெற்ற உற்சாகத்துடனேயே இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரில் களமிறங்வுள்ளது.
எனினும் உபாதைக்கு உள்ளான அணித் தலைவர் பென் ஸ்டொக்ஸ் மற்றும் ஆரம்ப வீரர் சக் கிரோலி இடம்பெறாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
டெஸ்ட் சம்பியன்சிப்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் அங்கமாக இந்த டெஸ்ட் தொடர் அமைந்திருப்பதால் உலக டெஸ்ட் சம்பியன்சிப் கிண்ணத்தை வெல்வதிலும் இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமாக உள்ளது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் தரவரிசையில் இலங்கை அணி தற்போது 4 ஆவது இடத்தில் இருப்பதோடு இங்கிலாந்து 7 ஆவது இடத்தில் காணப்படுகிறது.
இதன்படி இங்கிலாந்து அணி சார்பில் டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (c), ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வூட், சோயிப் பஷீர் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |