2024 உலகக் கிண்ண கிரிக்கட்: மைதானங்களின் திருப்தியின்மை குறித்து ஐசிசி அறிக்கை
நியூயோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற 2024 ஆண்களுக்கான 20க்கு 20 உலகக் கிண்ண முதல் இரண்டு போட்டிகளுக்கும், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டிக்கான பிரைய்ன் லாரா மைதான மேற்பரப்பும்( பிட்ச்) திருப்திகரமாக இல்லை என்று சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த மதிப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் போட்டிகளில், ஜூன் 3 அன்று தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை 77 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது போட்டியில்
இரண்டு நாட்களுக்குப் பிறகு அயர்லாந்து 96 ஓட்டங்களுக்கு இந்தியாவினால் மட்டுப்படுத்தப்பட்டது.
இரண்டாவது போட்டியில், ஆடுகளத்தின் எதிர்பாராத துள்ளல் காரணமாக இரு அணிகளைச் சேர்ந்த பல வீரர்கள் உடலில் தாக்கப்பட்டனர். ரோஹித் சர்மா காயத்துடன் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அயர்லாந்தின் ஹாரி டெக்டர் பாதிக்கப்பட்டார்
முன்னதாக எண்டி ஃப்ளவர் நியூயோர்க்கில் உள்ள ஆடுகளத்தை "ஆபத்தான எல்லை" என்று விபரித்தார்,
எனினும். இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் மைக்கேல் வோகன் "அதிர்ச்சியூட்டும்" மேற்பரப்பு என்று அதனை குறிப்பிட்டார்.
இந்தநிலையில், அரையிறுதிக்கு பயன்படுத்தப்பட்ட பிரைய்ன் லாரா ஆடுகளம் குறித்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |