ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகள்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2024ஆம் ஆண்டிற்கான போட்டிகள், பங்களாதேஷில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு (UAE) மாற்றப்படும் என்பதை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் உறுதி செய்துள்ளது.
அக்டோபர் 3 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பங்களாதேஷில் திட்டமிடப்பட்டிருந்த இந்தப்போட்டிகள், மாற்று ஏற்பாடுகளின்படி, டுபாய் மற்றும் சார்ஜாவில் நடத்தப்படவுள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப்போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் முன்வைத்த போதும், போதுமான கால அவகாசம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
