கொழும்பில் முதன்முறையாக தேசிய சாரணர் பொசன் வலயம்
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு முதன்முறையாக நடத்தப்படவுள்ள 'தேசிய சாரணர் பொசன் வலயம்' தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேசிய சாரணர் பொசன் வலயக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(09.06.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான சாரண உறுப்பினர்கள்
இம்முறை பொசன் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரில் இந்த ஆன்மீகப் பொசன் வலயத்தை மிக விமர்சையாக நடத்துவது குறித்தும், அதற்கான பூர்வாங்க பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்தும் இங்கு விரிவாகக் ஆராயப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தின் நேரடித் தலையீடு மற்றும் வழிகாட்டலின் கீழ், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அரச துறையினரினதும், தனியார் துறையினரினதும் முழுமையான பங்களிப்புடன் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சாரண உறுப்பினர்களின் பங்கேற்புடன் பொசன் வலயம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது.
விசேட நிகழ்ச்சிகள் உள்ளடக்கம்
கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் முதல் பொலிஸ் தலைமையக சந்தி வரையிலான வீதிப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த விசேட பொசன் வலயம் அமைக்கப்படவுள்ளது.

இதன்போது, பிரம்மாண்ட மின்விளக்குத் தோரணங்கள், சாரணர்களால் தயாரிக்கப்படும் வர்ண விளக்குக் கூடுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை மலையின் மாதிரிக் வடிவங்கள், பக்திப் பாடல் அரங்குகள் மற்றும் அன்னதானத் தன்சல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையேயும் ஆன்மீக எழுச்சியையும் மத நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் பல விசேட நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, அரச நிறுவனங்கள் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் டி. சி. ஜயதேவ, பௌத்த விவகார திணைக்களத்தின் ஆணையாளர் (தஹம் பாடசாலை) வசந்த குமார லியனகே, கொழும்பு மேலதிக மாவட்ட செயலாளர் எம். ஏ. எஸ். காஞ்சனா குணவர்தன, கொழும்பு பிரதேச செயலாளர் யூ. பி. எஸ். ஏ. பியதாச உள்ளிட்ட சிவில் அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam