அதிகளவான பயணிகளுடன் போலந்தில் இருந்து இலங்கைக்கு வந்த முதல் விமானம்
குளிர்கால சுற்றுலா காலப்பகுதியை முன்னிட்டு போலந்தில் இருந்து இலங்கைக்கு வரும் முதல் விமானம் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ஸ்மார்ட் விங்ஸ் எயார்லைன்ஸின் 3Z-7648 என்ற போயிங்-737 ர விமானம், நேற்று இரவு 10.10 மணிக்கு போலந்தின் வார்சாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
குறித்த விமானத்தில் 180 பயணிகளும் மற்றும் 09 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.
விமான சேவை
குறித்த போலந்து ஸ்மார்ட் விங்ஸ் விமான சேவை வாரத்திற்கு ஒரு முறை, அதாவது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான சேவையை முன்னெடுக்கவுள்ளது.

இந்த சேவையை அடுத்தாண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பான வரவேற்பு
இந்த விமானங்களில் வருகை தரும் பயணிகள் இலங்கையின் கடலோரப் பகுதிகள், சிகிரியா, தம்புள்ளை, கண்டி, நுவரெலியா மற்றும் யால ஆகிய இடங்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த போலந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் மற்றும் பயண நிறுவனத்தின் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு வழங்கியுள்ளனர்.







அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam