கிழக்கில் பிரகடனப்படுத்தப்பட்ட முதலாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயம்
கிழக்கில் முதலாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் (Central Environmental Authority) ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் அமைந்துள்ள ஏத்தாலைக் குளம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வானது இன்று (05.04.2024) குருக்கள்மடம் ஐயனார் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.
நியமனக் கடிதங்கள்
இதன்போது ஏத்தாலைக் குளத்தை பாதுகாப்பதற்குரிய அதிகாரிகளுக்கான நியமனக்
கடிதங்களையும் மாவட்ட செயலாளர் வழங்கி வைத்துள்ளார்.
பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்னம் ஆகியார் அடங்கி குழுவினர் ஏத்தாலைக் குளத்தில் தங்கியுள்ள உள்ளாட்டு வெளிநாட்டுப் பறவைகளைப் பார்வையிட்டுள்ளனர்.
குருக்கள்மடம் ஏத்தாலைக் குளத்தில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் காணப்படுதோடு உல்லாசப்பயணிகளையும், கவரும் இடமாகவும், அருகிவரும் தாவரங்கள், மற்றும் பூச்சியினங்களையும் கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி முரளிதரன் மற்றும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தம்மிக்க கருணாரெத்தின, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெகநாத், காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறீதர், மற்றும் கமலந அமைப்புனர் பொதுமக்கள், பாடசாலை சுற்றாடல் முன்னோடி கழக மாணவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக செய்தி- குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |