கொழும்பில் களமிறங்கும் ராஜபக்சர்கள் - அவசரமாக இந்தியா சென்றுள்ள ரணில்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். .
முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவும் பயணித்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டுப் பயணமாக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
திருமண நிகழ்வு
அவர்கள் இன்று காலை 08.40 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-121 மூலம் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டனர்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் அவர் சென்னை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சமகால அரசாங்கத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் விஜயம் அமைந்துள்ளமை குறித்து அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அரசுக்கு எதிராக கோஷம்
நிதி மோசடி குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட போது, நாமல் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியிருந்தன.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட பலர் பங்கேற்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் இன்றைய எதிர்ப்பு பேரணியின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video...