வழக்கை தொடர்ந்து கோணேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட சுமந்திரன்
இலங்கை தமிழரசு கட்சியின் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) திருகோணமலை - திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின்(TNA) நிர்வாகத் தெரிவில் ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு
குறித்த வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றதுடன், வழக்கு முடிவடைந்ததையடுத்து எம். ஏ சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனடியாக விரைந்து சென்று திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதே நேரம் குறித்த ஆலயத்தில் கனடா நலன்புரிச் சங்கத்தின் ஊடாக அன்னதானம்
வழங்கப்பட்டதுடன் அன்னதான நிகழ்வினை இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்
தலைவரும் திருகோணமலை மாவட்ட நலன்புறு சங்கத்தின் தலைவருமான எஸ். குகதாசன்
ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |