உக்ரைன் மீதான "முதல் நாள் போர் வெற்றிகரமானது" - ரஷ்யா அறிவிப்பு
உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷ்யா, இன்று அதிகாலையில் உக்ரைன் மீது வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி போரை தொடங்கியிருந்தது.
இந்நிலையில், உக்ரைன் மீதான முதல்நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் 1½ லட்சம் படை வீரர்களையும், போர்த்தளவாடங்களையும் ரஷியா குவித்திருந்ததுடன், உக்ரைன் மீது போர் தொடுக்க மாட்டோம் என்று ரஷியா தொடர்ந்து கூறிவந்த நிலையில், இன்று போரை தொடங்கியிருந்தது.
“வெளியில் இருந்து இந்தப் போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால், அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததைவிட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்த அடுத்த சில நிமிடங்களில் ரஷிய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை தொடங்கியிருந்தது.
இதன்படி கீவ், கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள இராணுவ நிலைகள், விமான தளங்கள், இராணுவ கிடங்குகள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. பல நகரங்களில் ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.
ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 இராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டன. இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் அடங்கும்.
மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள இராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை. நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
உக்ரைன் இராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். கீவ் நகர் அருகே 14 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 68 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகளை மேற்கோள் செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மீதான முதல்நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் படையெடுப்பின் முதல் நாள், 11 விமான நிலையங்கள் உட்பட 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டதாக அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு "முதல்நாள் போர் வெற்றிகரமானது " என்று தெரிவித்துள்ளது.
ரஷ்யா இராணுவம் தொடக்கத்தில் இருந்து இதுவரை 203 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்..
உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் ரஸ்யா! பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ள அமெரிக்கா
செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா! - ஐரோப்பாவிற்கு கடும் அச்சுறுத்தல்
உக்ரைன் தலைநகர் அருகே அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்படும் ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர்கள்!