செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா! - ஐரோப்பாவிற்கு கடும் அச்சுறுத்தல் (Video)
செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசகர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஐரோப்பாவிற்கு கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் அருகே உள்ள செர்னோபில் பகுதி தற்போது ரஷ்ய துருப்புக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைன் பிரதமர் கூறினார்.
இதேவேளை, உக்ரேனிய நகரமான மரியுபோல் இன்று மாலை தொடர்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதானல் அந்த நகரம் கடும் தீயில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்கிழக்கு நகரத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The first video from the captured Chernobyl nuclear power plant. Ukraine's PM Shmyhal has confirmed that the exclusion zone and all the NPP facilities have come under the control of the Russian forces. pic.twitter.com/D1da62UiRV
— Tadeusz Giczan ?? (@TadeuszGiczan) February 24, 2022
முதல் உக்ரேனிய அகதிகள் போலந்து சென்றடைந்தனர்
ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர் உக்ரைனில் இருந்து அகதிகள் சிலர் சாலை மற்றும் ரயில் மூலம் போலந்துக்கு சென்றடைந்துள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இருந்து ஒரு ரயில் இன்று பிற்பகல் சில நூறு பயணிகளை ஏற்றிக்கொண்டு போலந்து நகரமான ப்ரெசெம்சில் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
You My Like This Video