உக்ரைன் தலைநகர் அருகே அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்படும் ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர்கள்!
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே தாழ்வாகப் பறந்த ரஷ்ய ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்படும் காணொளி வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில் கூட்டமாக வரும் ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர்கள், உக்ரேனிய படையினரால் சுடட்டு வீழ்த்தப்படுகின்றது.
உக்ரைன் தலைநகருக்கு வடக்கே உள்ள வைஷ்ஹோரோட் பகுதியை கடக்கும் போது இந்த ஹெலிகொப்டர்கள் மீது கடும் துப்பாக்கிச் சூடு நடந்தியுள்ளது.
உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷ்யா, இன்று அதிகாலையில் உக்ரைன் மீது போரை தொடங்கியது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைன் முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது.
இதேவேளை, தீவிரமான படை நடவடிக்கையின் போது ரஷ்ய துருப்புக்களை உக்ரேன் படையினர் உயிருடன் சிறைப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
ரஷ்ய படைகளை உயிருடன் சிறைப்பிடித்த உக்ரேன் துருப்புக்கள்
குண்டு மழை பொழியும் போர் விமானங்கள்! ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் : உக்ரைன் அதிபரின் பதிலடி