ரஷ்ய படைகளை உயிருடன் சிறைப்பிடித்த உக்ரேன் துருப்புக்கள்
உக்ரேன்மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முதல் நாளான இன்று இரு நாட்டு தரப்பினருக்கும் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும் உக்ரேன் படைகளுடன் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சி படையின் தாக்குதலில் ரஷ்யா பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரிய வருகிறது.
தலைநகர் கீவ்வின் சில பகுதிகளை ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட போதும், பதிலடி காரணமாக மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் உக்ரேன் படைகள் கொண்டு வந்துள்ளன.
தீவிரமான படை நடவடிக்கையின் போது ரஷ்ய துருப்புக்களை உக்ரேன் படையினர் உயிருடன் சிறைப்பிடித்துள்ளனர்.
இதேவேளை உக்ரேனின் பதிலடி காரணமாக ரஷ்யாவின் 8 வானூர்திகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்ய படைகளின் தாக்குதலில் 50 உக்ரேன் இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 10 பொது மக்களும் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.