அதிகாலை தீப்பற்றி எரிந்த இயந்திர உபகரண விற்பனை நிலையம்! தடைப்பட்ட போக்குவரத்து
கண்டி - யாழ்ப்பாணம் ஏ 9 வீதியில், கட்டுகஸ்தோட்டை குடுகல பிரதேசத்தில் உள்ள இயந்திர உபகரணங்கள் விற்பனை நிலையத்தில் இன்று (04) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கண்டி மற்றும் மாத்தளை தீயணைப்புத் துறைகளின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து தடை
இந்நிலைமை காரணமாக மாத்தளை வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

மேலும், கட்டுகஸ்தோட்டை குடுகல பிரதேசத்தில் கண்டி-யாழ்ப்பாணம் ஏ 9 சாலையில் போக்குவரத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கட்டுகஸ்தோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நடுவீதியில் மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - கணவர் வெளியிட்ட அதிர்ச்சி வாக்குமூலம்