சீனாவின் முதியோர் இல்லமொன்றில் திடீர் தீவிபத்து - 20 பேர் பலி
வடக்கு சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள லாங்குவா கவுண்டியில் உள்ள முதியோர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 20 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த முதியோர் இல்லத்தின் மீதமுள்ள முதியவர்கள் மேலதிக கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மீட்பு முயற்சிகள் மற்றும் பின்தொடர்தல் பணிகளை மேற்பார்வையிட ஹெபே மாகாண அரசு மற்றும் செங்டே நகராட்சி அரசாங்கத்தின் நிபுணர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன.
உரிமையாளர் கைது
தீ விபத்துக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளது. தற்போது, அடுக்குமாடி குடியிருப்பின் பொறுப்பாளரான தொடர்புடைய நபரை உள்ளூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
A devastating fire at a nursing home in northern China has killed 20 people. Authorities are investigating the cause, while rescue teams and officials continue recovery and support efforts on site.
— The Daily Guardian (@DailyGuardian1) April 9, 2025
.
.
.#china #fire #nursinghomecare #thedailyguardian pic.twitter.com/KmCQcd9U3A
மேலும், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளித்தல் மற்றும் பிற பணிகள் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீனா மத்திய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
தீ விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்பார்வையிட சீனாவின் மாநில கவுன்சிலின் பணி பாதுகாப்பு குழு அறிவித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |