கொலம்பியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய விஞ்ஞானி
கொலம்பியாவில் பிரித்தானிய விஞ்ஞானி ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
றோயல் சொசைட்டி ஒப் பயோலஜியின்(RSB) முன்னாள் விஞ்ஞானியான அலெசாண்ட்ரோ கோட்டி(Alessandro Coatti) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலம்பியாவின் வடக்கு கரீபியன் கடற்கரையில் அமைந்துள்ள சாண்டா மார்டா நகரில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதன்போது, கருப்பு நிற சூட்கேஸ் ஒன்றில் அவரது உடல் பாகங்கள் இருந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த அலெசாண்ட்ரோ கோட்டி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (UCL) முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதோடு அவர் றோயல் சொசைட்டி ஒப் பயோலஜியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொலம்பிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri