அமெரிக்காவின் மிரட்டல் மொழிகளுக்கு அடி பணியப் போவதில்லை– ஈரான்
அமெரிக்கா தனது நாட்டை மரியாதையுடன் அணுக வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் மக்கள் மரியாதைக்கு மரியாதையுடன் பதிலளிப்பார்கள். ஆனால் மிரட்டல் மொழியை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஓமனில் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ (X) தளத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அணு ஆயுத பரவாமை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட உரிமைகளின் அடிப்படையில்தான் எங்கள் அணு நிலைப்பாடு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஓமனில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தையை அவர் “ஒரு முன்னேற்றமான படி” என வர்ணித்ததுடன், பேச்சுவார்த்தைக்கு தனது அரசு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 1979 இல் அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா முகம்மது ரேசா பஹ்லவியை பதவியில் இருந்து அகற்றிய புரட்சியிலிருந்து ஈரான் தனது சுயாதீனத்தையே முன்னிறுத்தி வருகிறது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அறாக்சி தெரிவித்துள்ளார்.
“எங்களுக்கு என்ன இருக்க வேண்டும், என்ன இருக்கக் கூடாது என்று யாருக்கும் கூறும் உரிமை இல்லை. சிவில் பயன்பாட்டிற்கான யூரேனியம் செறிவூட்டலை எங்களால் கைவிட முடியாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யாவுக்கும் பேச்சுவார்த்தை விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறாக்சி குறிப்பிட்டுள்ளார். ஈரானை தாக்கினால் முழு பிராந்தியமும் போரில் சிக்கிக் கொள்ளும் என ஈரானின் உயர் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்ரஹீம் மூசாவி, எச்சரித்துள்ளார்.
பிராந்தியப் போரை விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவுடன் நீண்டகாலப் போரை நடத்தத் தேவையான தயாரிப்பும் சக்தியும் எங்களிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam